கோவில்பட்டி கோயில் திருவிழாவில் திமுக இளைஞரணி அன்னதானம்

கோவில்பட்டி: கோவில்பட்டி சுப்பிரமணியாபுரம் முத்துகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி 36வது வார்டு திமுக இளைஞரணி சார்பில் அன்னதானம் நடந்தது. நகர செயலாளரும், கோவில்பட்டி நகராட்சி சேர்மனுமான கருணாநிதி, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.  36வது வார்டு திமுக கவுன்சிலர் கனகராஜ், நகர்மன்ற துணை தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி மாரிச்சாமி, 7வது வார்டு கவுன்சிலர் சண்முகவேல், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அமலிபிரகாஷ், நகர பொருளாளர் ராமமூர்த்தி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Related Stories: