×

ராமசந்திராபுரத்தில் புதிய மின்மாற்றி

விளாத்திகுளம்: புதூர் அருகே உள்ள ராமசந்திராபுரம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்பது இக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இதையேற்று 63 கேவிஏ திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடந்தது. விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் தலைமை வகித்து புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ். தலைவர் சீதாலட்சுமி, விளாத்திகுளம் செயற்பொறியாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ramachandrapuram ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...