தா.பேட்டை அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல்

தா.பேட்டை, ஜுன் 2: தா.பேட்டை ஒன்றியத்தில் வாளவந்தி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் கூலித் தொகை குறைவாக உள்ளது எனக்கூறி துறையூர் முசிறி சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்து. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நீலா ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூலிதொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்ததால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: