×

மன்னார்குடியில் ஜமாபந்தி நிறைவு 376 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

மன்னார்குடி, ஜூன் 2: மன்னார்குடி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில் 376 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி மற்றும் ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் வழங்கினார். மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில் கடந்த 25ம் தேதி துவங்கி நடந்து வந்தது. இதில், பாலையூர், தலையாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், உள்ளிக்கோட்டை ஆகிய 5 உள்வட்டங்களுக்கு உட்பட்ட 95 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, திருமணம் மற்றும் இறப்புக்கான உதவித் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட 12 வகையான கோரிக்கைகள் அடங்கிய 667 மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் வருவாய் துறை அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு 376 மனுக்கள் ஏற்கப்பட்டது. 47 மனுக்கள் பிற துறைக்கு அனுப்பப்பட்டது. 244 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. நேற்று ஜமாபந்தியின் நிறைவு நாள் நிகழ்ச்சி வட்டாட்சியர் அலுவலக்தில் நேற்று தாசில்தார் ஜீவா னந்தம் முன்னிலையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கலந்து கொண்டு 147 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட 376 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டாட்சியர்கள் இளங்கோவன், நாகராஜன், அலுவலக மேலாளர் (குற்றவியல் ) பிரீத்தி ராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Mannargudi ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்