கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த கன்று குட்டி உயிருடன் மீட்பு

கறம்பக்குடி, ஜூன் 2: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லையை சேர்ந்தவர் பாரதி. இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று பசு மாட்டின் கன்று குட்டி மேய்ந்து கொண்டிருந்த போது 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. உடனடியாக தகவல் அறிந்து கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தை ராசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தவித்து கொண்டிருந்த கன்று குட்டியை உயிருடன் மீட்டு பாரதியிடம் ஒப்படைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து கன்று குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொது மக்கள் பாராட்டினர்.

Related Stories: