×

குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீரை உபயோகிப்பதால் ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சல் பரவல் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சிகிச்சை

நெல்லை: ஆலங்குளம் அருகே புதுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது காசிநாதபுரம். இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் காசிநாதபுரம், புதுப்பட்டி பஸ் நிறுத்தம் ஆகிய 2 இடங்களில் வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தாமிரபரணி குடிநீர் பைப்லைன் உடைந்து வாறுகால் அருகிலும் சாலையோரமும் 2 மாதமாக செல்வது தெரியவந்தது. அந்த இடத்தை மாவட்ட இளநிலை பூச்சியாளர் பாலாஜி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கெங்காதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீரில் ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவது, ஆட்கள் கை, கால்களை கழுவுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அங்கிருந்து தண்ணீரைக் குடிப்பதற்கும் பொதுமக்கள் எடுத்து செல்கின்றனர். இதனால் கிருமிகள் உருவாகி காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்ததால் சுகாதாரத் துறையினர் அந்த தண்ணீரை குடிநீராக  யன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தண்ணீரை காய்ச்சி மூடிவைத்து குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் பொது மக்களிடம் தெரிவித்தனர்

Tags : dengue outbreak ,Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி