தமிழகத்தில் காவிக்கூட்டம் கால் பதிக்க முடியாது பல்லடத்தில் சுப.வீரபாண்டியன் பேச்சு

பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள அருள்புரம், தெற்குபாளையம், பனப்பாளையம், சாமளாபுரம், மகாலட்சுமி நகர் ஆகிய இடங்களில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை இயக்க கொடியேற்று விழா மற்றும் குப்புசாமிநாயுடு புரத்தில் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.  அலுவலகத்தை திறந்து வைத்து மாநில பொதுச்செயலாளர்  சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டிற்கு முன்பைவிட கூடுதலாக பெரியார் தேவைப்படுகிறார். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் கால் பதித்து விடலாம் என்று நினைக்கும் காவி கூட்டம் தமிழகத்தில் மட்டும் கால் பதிக்க முடியாமல் தவிக்கிறது. இது பெரியார் மண்ணாக முதல்வர் சொல்கின்ற திராவிட மாடல் ஆட்சி நடக்கிற மண்ணாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்தை ஊர் ஊராக, திண்ணை திண்ணையாக எடுத்து செல்லும் பணியை திராவிட இயக்கத் தமிழர் பேரவை செய்யும். ஜனநாயகத்தில், மத நல்லிணக்கத்தில், சமூக நீதியில் ஒத்த கருத்துடையவர்களாக உள்ளவர்கள், மத மறுப்பு, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஏற்கும். என்றார். முடிவில் திருப்பூர் மாநகர செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Related Stories: