சீர்காழி அருகே பச்சைப்ெபருமாநல்லூர் திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி விழா

சீர்காழி,, ஜூன் 2: சீர்காழி அருகே பச்சைப் பெருமாள் நல்லூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் வைகாசி மாத உற்சவத்தை முன்னிட்டு தீமிதி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மாலை நடந்த தீ மிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: