×

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை புகளூர் நகராட்சி, கரூர் ஒன்றிய பகுதியில் கழக கொடியேற்றி கொண்டாட வேண்டும்

வேலாயுதம்பாளையம், ஜூன் 2: கரூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நொய்யல் குறுக்குச்சாலையில் உள்ள அம்மையப்பர் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான நொய்யல் சேகர் (எ) குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கரூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது. கரூர் மேற்கு ஒன்றியத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படம் வைத்து மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புகளூரில் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்றும், புன்னம்சத்திரம் சித்தார்த் முதியோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் ஏழை மக்களுக்கு நலத் திட்டம் வழங்குவது, புகளூர் நகராட்சியில் நகராட்சி கமிஷனர் கனிராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கரூர் ஒன்றியம் மற்றும் புகழூர் நகராட்சி பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகரசபை துணைத்தலைவர் பிரதாபன், தொழிற்சங்க செயலாளர் அண்ணா வேலு, நகராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Former ,Chief Minister ,Karunanidhi ,Union Territory of Bhubaneswar ,
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...