×

குளித்தலையில் 24 வார்டுகளிலும் கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நகர திமுக முடிவு

குளித்தலை, ஜூன் 2: கரூர் மாவட்டம் குளித்தலை நகர திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நகர அவைத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதிகள் மெடிக்கல் மாணிக்கம், ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தமிழரசன் வரவேற்றார். நகர செயலாளரும், எம்எல்ஏவுமான மாணிக்கம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து பேசினார். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்த தின விழாவை முன்னிட்டு குளித்தலை நகரில் உள்ள 24 வார்டுகளிலும் திமுக கொடியை ஏற்றி கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவது. தமிழக முதல்வரின் ஓராண்டு சாதனைகளை கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் அளித்துள்ள மக்கள் நலத்திட்டங்களையும் துண்டு அறிக்கையாக அச்சிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்க இருக்கிறார். அந்த துண்டு அறிக்கைய அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்குவது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி பிரதிநிதிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : DMK ,Karunanidhi ,Kulithalai ,
× RELATED குளித்தலை, மணப்பாறை சாலையில்...