வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தை எஸ்பி ஆய்வு

செய்துங்கநல்லூர், மே 31:  வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தை எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி- முறப்பநாடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தை தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள துப்பாக்கி சுடுதளம், நீச்சல்குளம் உள்பட அதன் வளாக பகுதிகளை ஆய்வு செய்தார். துப்பாக்கி சுடு தளம் வளாகத்தை நல்ல முறையில் பராமரித்து, தூய்மையாக வைக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories: