×

நெல்லையில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமையில் தீர்மானம்

நெல்லை, மே 31:  உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நெல்லையில் நடந்த மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் தலைமையில் வண்ணார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுப சீதாராமன் தலைமை வகித்தார். நெல்லை மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர அவைத்தலைவர் வேலு என்ற சுப்பையா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அப்துல் வஹாப் எம்எல்ஏ பேசுகையில் ‘‘ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்த கலைஞரின் 99வது பிறந்த நாளை நெல்லை மத்திய மாவட்டத்தில் கட்சி கொடியேற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கண் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடத்தி ஜூன் மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும். திராவிட மாடல் பயிற்சி பாசறைகளை சிறப்பாக நடத்துவது. திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை தமிழக அமைச்சராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் நெல்லை மகேஸ்வரி, பாளை பிரான்சிஸ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், தொமுச தர்மர், பொதுக்குழு உறுப்பினர் சுடலைகண்ணு, மாநகர துணைச் செயலாளர்கள் ரமேஷ், செய்யது முகைதீன், வள்ளியம்மாள், ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், நடராஜன், மாரியப்பன், பகுதி  பொறுப்பாளர்கள் ரவீந்தர், டாக்டர் சங்கர், துபை சாகுல், செல்லத்துரை, முன்னாள் எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பலராமன், நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி , மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெகநாதன், கந்தன், அஜய், சுப்பிரமணியன், மாரியப்பன், அலிசேக் மன்சூர், மன்சூர், ரம்சான் அலி, வில்சன் மணித்துரை, உலகநாதன், சகாய ஜீலியட் மேரி, வக்கீல் சுந்தர், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்வி சுரேஷ், பாலன் என்ற ராஜா,  மகளிர் அணி துணை அமைப்பாளர் அனிதா, மாநகர பொருளாளர் வண்ணை சேகர், துணை அமைப்பாளர் தில்லை ரமேஷ், கலை இலக்கிய அணி மேகை செல்வம், எல்ஐசி பேச்சிமுத்து மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Minister ,Abdulwahab ,MLA ,Udhayanidi Stalin ,Central District Executive ,Committee ,Nelli ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சர்...