×

குடந்தை டபீர் காவிரி படித்துறையில் சோமாவதி அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கும்பகோணம், மே 31: 12 மாதங்கள் கொண்ட தமிழ் வருட கணக்கில் இரண்டாவதாக வரும் மாதம் வைகாசி மாதமாகும். இந்த வைகாசி மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த அமாவாசை தினம் திங்கட்கிழமையில் வருவதால், அதற்கு சோமாவதி அமாவாசை என அழைக்கப்படுகிறது. மற்ற நாளில் செய்யக்கூடிய அமாவாசை விரதத்தை விட, இந்த சோமாவதி அமாவாசை அன்று விரதமிருந்து இறைவழிபாடு மேற்கொண்டால் பன்மடங்கு பலன் கிடைக்கும். இந்த வைகாசி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதன்படி நேற்று திங்கட்கிழமை வைகாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு கும்பகோணம் டபீர் காவிரி படித்துறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Tags : Somavathi ,New Moon Day ,Kuttan Dabir ,Cauvery Stupa ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை...