×

விருத்தாசலம் ஒன்றிய சேர்மனாக மலர்முருகன் பதவி ஏற்பு


விருத்தாசலம், மே 31: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சி மன்றங்கள் மற்றும் 19 ஒன்றியக்குழு வார்டுகள் அமைந்துள்ளன. இதில் ஒன்றியக் குழு தலைவராக இருந்து வந்த கவுன்சிலர் செல்லதுரை மீது, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையை இழந்ததால், கடந்த 28ம் தேதி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 3 வாக்குகள் மட்டுமே பெற்று செல்லதுரை தோல்வியடைந்தார். 16 வாக்குகள் பெற்ற திமுக கவுன்சிலர் மலர் முருகன் ஒன்றிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், துணைச் சேர்மன் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி தலைமை தாங்கி ஒன்றிய சேர்மன் மலர் முருகனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்ததுடன் சேர்மன் இருக்கையில் அமர்ந்து கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் கல்வியாளர் சுரேஷ், திமுக ஒன்றிய துணை செயலாளர் முத்து, இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் பாலு, மாவட்ட பிரதிநிதி பச்சமுத்து, கவுன்சிலர் சிவகண்டன், வெங்கடாஜலபதி, பன்னீர்செல்வம், கருணாநிதி, சரவணன், இளையராஜா, அருள் மற்றும் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட சேர்மனுக்கு சால்வை அணிவித்தும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Malarmurugan ,Vriddhachalam Union ,
× RELATED விருத்தாசலம் ஒன்றிய குழு தலைவர் தேர்வு