முத்துப்பேட்டையில் கஞ்சா விற்றவர் கைது

முத்துப்பேட்டை, மே 30:  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை பகுதியில் கஞ்சா விற்பதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜாம்புவானோடை சிவராமன் ஸ்தூபி அருகே ஜாம்புவானோடை மேலக்காட்டை சேர்ந்த முருகையன் மகன் பெரியசாமி (42) என்பவர் கஞ்சா விற்றது தெரிந்தது. அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார் 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பெரியசாமியை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: