×

பெற்றோர்கள் பங்கேற்க அழைப்பு காவிரி டெல்டா பகுதிகளில் குறுவையில் அதிக மகசூல் பெற சாகுபடி உத்திகளை விவசாயிகள் கையாளும் வழிகள் நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் யோசனை

தஞ்சாவூர், மே 30: காவிரி டெல்டா பகுதிகளில் குறுவையில் அதிக மகசூல் பெறுவதற்கு கீழ்கண்ட சாகுபடி உத்திகளை விவசாயிகள் கையாளுமாறு ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சுப்ரமணியன் யோசனை தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை நீர் இந்த வருடம் கடந்த 24ம் தேதி நிறந்து விடப்படுவதால் விவசாயிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய குறுகிய கால ரகங்களான ஏடிடீ 53, ஏடிடீ 56, ஏடிடீ 57, கோ 51, கோ 54, கோ 55 மற்றும் டிபிஎஸ் 5 ரகங்களை தேர்வு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இதில் டிபிஎஸ் 5-ஐ விடுத்து ஏனைய ரகங்கள் சன்ன மற்றும் அதிசன்ன வகை ரகங்களாகும். இந்த ரகங்களை தேர்வு செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறுவதுடன் எளிதில் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சன்ன ரகங்களை பயரிடும் போது விவசாயிகளுக்கு நல்ல மககுலும் மற்றும் நல்ல விலையும் எந்தவித சிரமமும் இன்றி விற்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் தாமதமின்றி மே மாதத்தில் நாற்றாங்கால் தயாரித்து நடவு பணிகளை விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாமதமாக விதைக்கும் பட்சத்தில் குறுவை பயிரின் அறுவடை வடகிழக்கு பருவமழை காலத்தில் அமைந்துவிடும். இதனால் அதிக அறுவடை சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முன்கூட்டியே விதைப்பதனால் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் சேதத்தில் இருந்து குறுவை பயிர் அறுவடையை காத்து நல்ல மகசூல் பெறமுடியும்.

நாற்றாங்கால் தேர்வு செய்யும் போது நல்ல வடிகால் வசதியுன மேட்டுப்பாத்தியில் பாய் நாற்றாங்கால் அமைத்து தயாரிக்கவும். ஒரு ஹெக்டர் நடவு செய்வதற்கு 20 சென்ட் நாற்றாங்கால் போதுமானது. நாற்றாங்காலில் அடியுரமாக கடைசி உழவுக்கு முன்பு 40 கிலோ டி.ஏ.பி இடவும். ஒரு எக்டர் நடவு செய்வதற்கு 10 கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதைக்கு கார்பன்டசிம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து 10 மணிநேரம் ஊறவைக்கவும். விதைத்த 8ம் நாளில் களை முளைபிற்கு முந்திய களைக்கொல்லி பூட்டாக்குளோர் 100 மி.லி அல்லது பெண்டி மெத்தாலின் 100 மி.லி 20 சென்ட் நாற்றாங்ங்களுக்கு தெளிக்கப்பட வேண்டும். களைக்கொல்லி தெளிப்பதற்கு முன்னர் சிறிய அளவு தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும். தேக்கப்பட்ட தண்ணீர் வடிக்கப்படக்கூடாது. மாறாக தானாகவே மண்ணில் மறைதல் நல்லது.

ஏற்கனவே நாற்று விட்ட வயல்களில் வாளிப்பான நாற்றுக்களை பெற விதைத்த 10ம் நாளில் 80 கிலோ ஜிப்சம் மற்றும் டிஏபி 20 கிலோ இடுவதால் நாற்றுப்பறிக்கும் போது வேர் அறுபடுவதை தவிர்க்கலாம். 20 நாட்களுக்குள் நாற்றுக்களை நடவேண்டும். நடுவதற்க்கு முன்பதாக நாற்றுகளின் வேர் பகுதியை அசோஸ்பைரில்லம் 4 கிலோ, பாஸ்போபாக்டீரியா 1 கிலோ அல்லது அசோபாஸ் 2 கிலோ ஆகியவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து 15, 30 நிமிடங்கள் நாற்றுக்களின் வேர்ப்பகுதி நனையும் படி வைத்து பின்பு நடவு செய்யுமாறு கேட்டுக்கொள்ப்படுகிறார்கள்.

Tags : Cauvery Delta Areas ,
× RELATED காவிரி டெல்டா பகுதிகள்...