×

பொன்னமராவதி ஜெஜெ நகரில் மின்மயானம் அமைக்க கூடாது


பொன்னமராவதி, மே30: பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் மின்மயானம் அமைக்ககூடாது என அப்பகுதி பொதுமக்கள் தொட்டியம்பட்டி ஊராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர். பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் பகுதியில் மின்மயானம் அமைக்க அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் இங்கு மின்மயானம் அமைக்க கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி தொட்டியம்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் கீதா சோலையப்பனிடம் மனு அளித்துள்ளனர். மனுவில் கூறியுள்ளதாவது, பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் காமராஜர் நகர், முத்தமிழ்நகர், ராஜராஜன் நகர், மீனாட்சிநகர் உள்ளிட்ட பல்வேறு நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் மின் மயானம் அமைக்க அரசு அதிகராரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். இப்பகுதியில் பொதுவாக இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வருவதால் எங்களது பகுதியில் மின்மயானம் அமைக்க வேண்டாம். உடனடியாக மின்மயானம் அமைக்கும் பணியினை கைவிடவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Ponnamaravathi JJ ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...