×

சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை

கொள்ளிடம், மே30: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் சிறப்பு வாய்ந்த சாந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் தீமிதித்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இக்கோயிலில் கிராம பொதுமக்கள் சார்பில் சாதாரண கொடிமரத்துக்கு பதிலாக பஞ்சலோக கொடிமரம் புதியதாக அமைக்கப்பட்டு அதற்கான சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு கொடிமரத்துக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. முன்னதாக சாந்த முத்துமாரிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chandappadukai Santha Muthumariamman ,Temple ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...