×

செம்பனார்கோயில் அருகே வடகரை-கடக்கம் செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

செம்பனார்கோயில், மே30: செம்பனார்கோயில் அருகே வடகரை- கடக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக கடக்கம், கழனிவாசல், அன்னவாசல், மாங்குடி வாடகுடி, மாந்தை, அகரஅன்னவாசல், கிளியனூர், வடகரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகள் தொடர்பாக தினமும் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலையில் டூவீலர், கார், வேன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் இருந்து கொண்டே இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடக்கம்- வடகரை சாலையின் வழியாகத்தான் மயிலாடுதுறை, செம்பனார்கோயில், தரங்கம்பாடி போன்ற ஊர்களுக்கு பல்வேறு பணிகள் தொடர்பாக சென்று வருகிறோம். குண்டும், குழியுமான சாலையின் வழியாக செல்லும்போது வாகனங்கள் பழுது ஏற்பட்டு அவசரத் தேவைக்கு நாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்படுகிறது.மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும்போது சாலை எது? பள்ளம் எது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற வாகனங்கள் கூட அவசர பயன்பாட்டிற்கு விரைந்து செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை மழை காலத்திற்கு முன்பு விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Sembanarkoil ,
× RELATED செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்