×

நாகர்கோவிலில் குருசடி விவகாரம் தேவாலயம் அருகே போலீஸ் குவிப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

நாகர்கோவில், மே 30:  நாகர்கோவில் மேலப்பெருவிளையில் இருந்து ஊர்வலமாக சுங்கான்கடை மலை பகுதியில் உள்ள குருசடிக்கு தடையை மீறி செல்ல போவதாக வெளியான தகவலை ெதாடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
நாகர்கோவில் அடுத்த சுங்கான்கடை அருகே உள்ள மலையில் குருசடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமான பகுதி என்பதால் அங்கு சென்று ெஜபம் செய்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்றம் இந்த குருசடி பகுதிக்கு செல்ல தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மேலப்பெருவிளையில் உள்ள தேவாலயத்தில் இருந்து ஊர்வலமாக குருசடிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து குருசடி செல்லும் மலைப்பாதையில் திரண்டனர். இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்படாத வகையில் மேலப்பெருவிளை, சுங்கான்கடை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். கல்குளம் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர். மேலப்பெருவிளையில் டிஎஸ்பிக்கள் தங்கராமன், நவீன்குமார் தலைமையில் அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் மேலப்பெருவிளை ேதவாலயத்தில் இருந்தவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ள வேண்டும் என கூறினர். இதையடுத்து அங்கிருந்த ெபாதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து மேலப்பெருவிளை மற்றும் சுங்கான்கடை மலை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags : Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...