×

நேஷனல் டிபன்ஸ், நேவல் அகாடமிகளில் 400 காலியிடங்கள் விண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி நாள்

நாகர்கோவில், மே 30: நேஷனல் டிபன்ஸ், நேவல் அகாடமிகளில் உள்ள 400 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நேஷனல் டிபன்ஸ் அகாடமிக்கும், நேவல் அகாடமிக்கும் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. 400 காலியிடங்கள் உள்ளன. திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, சர்வீஸ் செலக்ஷன் போர்டு தேர்வு, நேர்முக தேர்வு நடைபெறும். தேர்வு 2 கட்டமாக நடைபெறும். முதல்கட்டத்தில் கணிதத்தில் இருந்து 300 மதிப்பெண் கேள்விகள் இடம்பெறும். 2ம் கட்டத்தில் 600 மதிப்பெண் பொது தகுதி தேர்வு தொடர்புடைய கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு தேர்வும் இரண்டரை மணி நேரம் நடைபெறும். அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. செப்டம்பர் 4ம் தேதி தேர்வு நடைபெறும். மேலும் விபரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 7 ஆகும்.

ஆர்மி விங், நேஷனல் டிபன்ஸ் அகாடமி: 10, பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும். ஏர்போர்ஸ், நேவல் விங் நேஷனல் டிபன்ஸ் அகாடமி, நேவல் அகாடமி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றுடன் 10, பிளஸ் 2 முறையில் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும். தற்போது பிளஸ் 2 படிக்கின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் நேர்முக தேர்வு நடைபெறும் வேளையில் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது. வயது வரம்பு 2 ஜனவரி 2004ம், 1 ஜனவரி 2007க்கும் இடையில் பிறந்தவர் தகுதியுடையவர். பயிற்சி காலம் முடியும் வரை திருமணம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

Tags : National Defense ,Naval Academies ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் மூன்று...