நீண்ட காலமாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: கோயில் நிலம் பயன்படுத்துவோர் சங்க கூட்டத்தில் முடிவு

காஞ்சிபுரம்: தமிழ்நாடுஅனைத்து சமய கோயில் நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் ரங்கநாதன், பொருளாளர் லட்சுமிபதி, சிறப்பு தலைவராக முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் கே. நேரு, சாரங்கன், முருகேசன், செல்வம், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீண்ட வருடங்களாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களை அகற்றாமல் அவர்களுக்கு உரிய காலத்தில் நில பட்டா வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் குடிமனை தொகையினை பல மடங்கு உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: