விவசாயிகள் சங்க மாநாடு

திருத்தணி: திருத்தணியில் விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்றது. திருத்தணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 7வது குழு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட துணை தலைவர் அப்சல் அகமது தலைமை வகித்தார். முன்னதாக பகுதி துணை தலைவர் ராமச்சந்திரன வரவேற்றார். பகுதி தலைவர் தியாகராஜன் மாநாட்டு கொடி ஏற்றிவைத்தார். இதில் விவசாய சங்க மாவட்ட குழு பாலாஜி அஞ்சல் தீர்மானம் வாசித்தார். மாவட்ட தலைவர் சம்பத் மாநாட்டு துவக்க உரையாற்றினார். பகுதி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டிப்பது. விவசாயிகள் விளைவிக்கும் பூ, காய், பழம், பால், நெய் மற்றும் தானிய வகைகளுக்கு அரசு ஆதார விலையை நிர்ணயம் செய்யவேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: