×

வெங்கல் அருகே விதிமீறி சவுடு மண் எடுத்த லாரி, பொக்லைன் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: வெங்கல் அருகே அரசு விதிகளை மீறி அதிக அளவில் சவுடு மண் எடுத்த லாரிகள், பொக்லைன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வெங்கல் அடுத்த மெய்யூர் ஏரி பகுதியில் சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்ற சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், அனுமதி அளித்த இடத்திலிருந்து வேறு இடத்தில் அதிக அளவில் சவுடு மண் எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையம் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதன்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் போலீசார் மெய்யூர் ஏரியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அனுமதி அளித்த இடத்திலிருந்து வேறு இடத்தில் பொக்லைன்கள் மூலம் அதிக ஆழம் தோண்டி அரசு விதிகளை மீறி மணல் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து, சவுடு மண் எடுத்து கொண்டிருந்த 11 லாரிகள் மற்றும் 5 பொக்லைன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Vengal ,
× RELATED சீத்தஞ்சேரி-வெங்கல் சாலையில் கேமரா...