அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் செவ்வை எம்.சம்பத்குமார் மணிமண்டபம் திறப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டையை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளரும், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான செவ்வை எம்.சம்பத்குமார், கடந்த ஆண்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து செவ்வாப்பேட்டையில் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும், மணிமண்டபம் திறப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, எஸ்.அப்துல் ரஹீம், முன்னாள் எம்பிக்கள் திருத்தணி கோ.அரி, ஜெ.ஜெயவர்தன், பேரவை மாநில நிர்வாகிகள் கே.ஏ.கே.முகில், சி.பி.மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் டி.பூங்கோவன், ச.சுமதி சம்பத்குமார்,  ச.நிரஞ்சன் சம்பத்குமார் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் விசிக மாநில நிர்வாகி நிறுவனத்து நிலவன், முன்னாள் எம்எல்ஏக்கள் சிறுனியம் பி.பலராமன், என்.எஸ்.ஏ.ரா.மணிமாறன், பொன்.ராஜா, மங்கலம் கல்வி குழுமங்களின் தலைவர் விக்டரி மோகன் ராக்கி சினிமாஸ் உரிமையாளர் டாக்டர் ஹரி, ஆர்.ஆர்.என்டர்பிரைசஸ் உரிமையாளர் சதீஷ்பாபு, வழக்கறிஞர் ரா.அந்தரிதாஸ் ஒன்றிய, நகர செயலாளர் புட்லூர் ஆர்.சந்திரசேகர், கே.ஜி.டி.கௌதமன், ஜி.கந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் கமாண்டோ ஏ.பாஸ்கரன், சி.ஒய்.ஜாவித் அகமத், பெருவை சி.சேகர், வேளஞ்சேரி த.சந்திரன், வேப்பம்பட்டு ஆர்.ராஜேஷ், எஸ்.ஏ.நேசன், சிற்றம் ஜெ.சீனிவாசன், எம்.நரேஷ்குமார், கே.பி.எம்.எழிலரசன், ஊராட்சி மன்ற தலைவர் பி.சீனிவாசன், காலனி பாலா, பெப்ஸி தாமு, புன்னை புஷ்பராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். முடிவில் வழக்கறிஞர் கெ.கணேசன் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: