சுத்தமல்லியில் ரவுடி குண்டாசில் கைது

பேட்டை,மே 28:  சுத்தமல்லி கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் மாயாண்டி (42). இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுத்தமல்லி விலக்கு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் நடந்த தகராறில் ஏற்பட்ட மோதலில் கொலைமுயற்சி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது கொலை கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் பிரபல ரவுடியான இவரை சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வேண்டுகோளின் பேரில் மாவட்ட எஸ்பி சரவணன் பரிந்துரையின் பேரில் நெல்லை கலெக்டர் விஷ்ணு மாயாண்டியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதற்கான நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம்  இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழங்கினார்.

Related Stories: