தா.பேட்டையில் ஒன்றிய அரசை கண்டித்து கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தா.பேட்டை, மே 28: தா.பேட்டை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன், மாவட்ட குழு சந்திரமோகன், ஒன்றியக்குழு சேகர், இந்திய கம்யூ., நிர்வாகிகள் நாகராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா கால நிவாரணம் வழங்குவதற்கான மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோரிக்கைகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

லால்குடி: லால்குடி ரவுண்டானா அருகில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ, விசி ஆகிய கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல், மற்றும் விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். சிவராஜ் பேசினார். இந்திய கம்யூ. ஒன்றிய பொறுப்பாளர் குணா நன்றி கூறினார்.

துறையூர்: துறையூர் அருகே உப்பிலியபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ.ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூ., விசி, அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

Related Stories: