தா.பழூர் அருகே பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் வாலிபர் கைது

தா.பழூர், மே 28: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமம் அண்ணா சிலை தெருவைச் சேர்ந்தவர் சுதா. இவரது இளைய மகள் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வந்த நிலையில் கடந்த 23ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை அடுத்த நாள் அதிகாலை முதல் காணவில்லை. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இடங்கண்ணி கீழத் தெருவை சேர்ந்த துரைவேம்பு மகன் செல்வக்குமார்(20) என்பவர் பள்ளி மாணவியை காதலித்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தா.பழூர் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான காவல்துறையினர் கடத்திச் சென்ற பள்ளி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவி மாயம்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் உல்லியக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் கலையரசன். இவரது மகள் விஜி பிரியா (19). இவர் தத்தனூரில் உள்ளஒரு தனியார் கல்லூரியில் பி.லிட் முதலாமாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்ற விஜி பிரியா வீடு திரும்பவில்லை . உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் விஜி பிரியாவின் தந்தை கலையரசன் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் வழக்குப்பதிந்து காணாமல் போன விஜிபிரியாவை தேடி வருகிறார்.

Related Stories: