பெரம்பலூர் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூர், மே 28: பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் துறையூர் சாலையி லுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் நேற்று (27ம் தேதி) மாலை பிரதோசத்தை முன்னிட்டு கவுரி சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிரதோஷ வழிபாட்டில் பெரம்பலூர், துறைமங்கலம், அரனாரை, எளம்பலூர், விளாமுத்தூர், நொச்சியம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: