ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம் திறப்பு

திட்டக்குடி, மே 28:  திட்டக்குடியில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ரிப்பன் வெட்டி நேற்று பள்ளியை திறந்து வைத்தார். தொடர்ந்து வசிஷ்டபுரம், கூத்தப்பன்குடிக்காடு ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் திறந்து வைத்தார்.  

 இதில் விருத்தாசலம் சார் ஆட்சியர் ராம்குமார், திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் சுகப்பிரியா, வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா சிவராமன், மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், சின்னசாமி, திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர், திட்டக்குடி நகரமன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், திட்டக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், ஜோதிடர் வசிஷ்டபுரம் செந்தில்நாதன், திமுக வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: