நரிக்குடி அருகே மழைக்கு மரம் விழுந்து வீடு சேதம்

காரியாபட்டி, மே 28: நரிக்குடி அருகே நாலூர் விலக்கு ரோடு பகுதியில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றுக்கு அப்பகுதியில் இருந்த ஒரு ஆல மரம் வேருடன் சாய்ந்தது. இதில் ஆல மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோ பலத்த சேதமடைந்தது. 2 டூவீலர்கள் சேதமடைந்தன. மேலும் சூறைக்காற்றுக்கு அப்பகுதியில் உள்ள வேப்ப மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. அப்பகுதியை சேர்ந்த குருசாமி, தெய்வசிகாமணி, ராமசுப்பு, மாரியப்பன் உள்ளிட்ட 8 பேர் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து சேதமடைந்தன. இதில் வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: