கோயில் திருவிழா

உத்தமபாளையம், மே 28: உத்தமபாளையம் அருகே, கோகிலாபுரத்தில் பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மந்தையம்மன் கோயில் திருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. முதல்நாள் முல்லைப் பெரியாற்றில் அம்மனுக்கு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து 2வது நாள் அதிகாலையில் அம்மனுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். இதை தொடர்ந்து கோவில்வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்களை வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று முளைப்பாரி எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

Related Stories: