×

30 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் பாம்பே சர்க்கஸ்

மதுரை, மே 28: மதுரையில் பார்வையாளர்களை கவரும் ‘கிரேட் பாம்பே சர்க்கஸ்’ விரைவில் துவக்கப்பட உள்ளது.‘ஏழாம் அறிவு’ திரைப்பட புகழ் கிரேட் பாம்பே சர்க்கஸ், 30 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் ஆரம்பமாக உள்ளது. மதுரை கே.புதூர் சி.எஸ்.ஐ மைதானத்தில் மிக விரைவில் துவங்கப்பட உள்ள இந்த பாம்பே சர்க்கஸ் குறித்து, இதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் பாலகோபால் கூறியதாவது: அந்தரத்தில் பறக்கும் `ப்ளே டிரிபிள்’ எனப்படும் விளையாட்டு, ஸ்கேட்டிங் பந்துகளை காலால் உதைத்து சாகசம் செய்தல், ஸ்கை வாக், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாட்டு கிளிகளின் சாகசங்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சர்க்கஸில் இடம்பெறுகின்றன. மேலும் எட்டு பந்துகளை இரண்டு கைகளால் லாவகமாக பிடிக்கும் ஜக்லின் விளையாட்டு, லூஸ்வேர் எனப்படும் கப்பன் சாசர் விளையாட்டு, ஜோக்கர்களின் நகைச்சுவை விளையாட்டுகள் இந்த சர்க்கஸில் சிறப்பு அம்சமாக இருக்கும். வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாகச விளையாட்டுக்களை நிகழ்த்த உள்ளனர். கிளி, புறா மற்றும் நாய்கள், பல்வகையான வித்தைகளை காட்டி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
 இந்த கிரேட் பாம்பே சர்க்கஸ் தினமும் பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகளாக நடத்தப்பட உள்ளது. ரூ.100, ரூ.150, ரூ.200 ஆகிய மூன்று வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
 இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Bombay Circus ,Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...