×

பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா

பல்லடம், மே 28: பல்லடத்தில் கடந்த 2020- ம் ஆண்டு ரூ.5.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதில் நீதிபதி அறைகள், எழுத்தர் அறை, நூலகம், பதிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இரண்டு அடுக்கு தளங்களுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்து நீதி மன்ற வளாகத்தை பார்வையிட்டார். முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் வரவேற்றார். இதில் உயர்நீதி மன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார்,சுந்தர்,ஆஷா, கல்யாணசுந்தரம், அமைச்சர்கள் ரகுபதி,கயல்விழி, மாவட்ட கலெக்டர் வினீத்,  எஸ்.பி. செஷாங் சாய் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், செம்மிபாளையம் ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி, மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் குமார்,பல்லடம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் சக்திவேல், உடுமலை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஸ்ரீரீதர், செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட தலைமை கூடுதல் நீதிபதி புகழேந்தி நன்றி கூறினார்.விழாவில் உடுமலை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் திறப்பு விழாவும் பெற்றது.

Tags : Integrated ,Building ,Palladam ,
× RELATED எளாவூர் ஒருங்கிணைந்த...