திருக்கண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாமா ருக்மணி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பொதுமக்கள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை, மே 28: பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சி மடவிளாகம் கிராமத்தில் ஸ்ரீபாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது.

இக்கோயிலின், கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கடந்த 26ம் தேதி தொடங்கி திருக்கண்டலம் பார்த்தசாரதி பட்டாச்சாரியா தலைமையில் 10க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் கலந்துகொண்டு அதிகாலை கணபதி ஹோமம் யாகசாலை அமைத்து லட்சுமி ஹோமம் முதல் கால யாக உள்ளிட்ட பூஜைகள் நடத்தினர். இதனை தொடர்ந்து, நேற்று 27ம் தேதி அதிகாலை கோபூஜை, 2ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

பின்னர், காலை 7 மணி அளவில் கும்பம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை புரோகிதர்கள் கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மடவிளாகம் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: