பரமத்திவேலூரில் வாகன தணிக்கையில் 50 பேருக்கு நோட்டீஸ்

பரமத்திவேலூர், மே 27: பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு சோதனை நோட்டீஸ் வழங்கப்பட்டது.  நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தலின் பேரில், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு) முருகன், பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (பொ) உமா மகேஸ்வரி, மற்றும் எஸ்ஐ உதயகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், ஓட்டுனர் உரிமம், சீட் பெல்ட், காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்துவது ஆகியன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் விவசாய பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர்கள், டிப்பர்கள் மற்றும் ஆட்டோக்களை ஆய்வு செய்து  ரிப்லெக்டர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. சோதனையில் சுமார் 250க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்ததில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

Related Stories: