கோயில் திருவிழா

நத்தம், மே 27:நத்தம் அருகே பந்திபொம்மிநாயக்கனூரில் உள்ள சாத்தாவுராயன் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கடந்த மே 17ம் தேதி கணபதி ஹோமம், சரஸ்வதி பூஜை நடந்தது.   அன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மே 22ம் தேதி ராஜகம்பளத்து நாயக்கரின் தேவராட்டம் நடைபெற்றது. 23ம் தேதி விநாயகர் கோயிலிலிருந்து தாரை  கிராம தெய்வங்களுக்கு பழக்கூடை எடுத்து வருதல், சக்தி அழைப்பு மாவிளக்கு எடுத்தல், அம்மன் அலங்காரம் செய்து கோயில் கொண்டு வரப்பட்டது.     அன்றிரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மே 24ம் தேதி பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல் தொடர்ந்து பொங்கல் வைத்தல் மற்றும் கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories: