×

திருப்புவனம் பேரூராட்சி கூட்டம்

திருப்புவனம், மே 27: திருப்புவனம்  பேரூராட்சி மன்றக்கூட்டம் நடைபெற்றது.  தலைவர் சேங்கைமாறன் தலைமை வகிக்க,  துணை தலைவர் ரகுமத்துல்லாகான் முன்னிலை வகித்தார். செயல்அலுவலர் ஜெயராஜ்  வரவேற்று பேசினார். இளநிலை எழுத்தர் நாகராஜன் கூட்டப்பொருளை வாசித்தார்.தலைவர்:  பேரூராட்சி பகுதியில் 1971ம் ஆண்டு போடப்பட்ட குழாய்கள் பத்து அடிக்கும்  கீழே தாழ்ந்து விட்டது. பல இடங்களில் குடிநீரில் சாக்கடை கலக்கிறது.  பழுது நீக்க இயலாத நிலை உள்ளதால் புது இணைப்புகள் பிவிசி பைப் மூலம்  அமைக்கப்படவுள்ளது. தூய்மை பணியார்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க இடம்  தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் திருப்புவனம்  பேரூராட்சியில் பழைய சந்தை இருந்த தேவஸ்தான இடத்தில் பஸ் நிலையம் அமைக்க  மாவட்ட நிர்வாகம், உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தப்படும் என்பது  உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பழைய பஸ் நிலையம் அமைத்த  இடம் சர்வே எண் 16/16 அரசு புறம்போக்கு இடம் என் வருவாய் துறை ஆவணத்தில்  உள்ளது என தெரிவிக்கப்பட்டது. தலைவர்: இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன்  ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 1 முதல் 36 வரியிலான அனைத்து  தீர்மானங்களும் பெரும்பாலான திமுக கவுன்சிலர்களின் ஆதரவுடன்  நிறைவேற்றப்படுகிறது என்றார்.


Tags : Turnaround Municipality Meeting ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்