×

முத்ரா லோன் மேளா 394 பேர் ரூ.8.37 கோடி கோரி விண்ணப்பம்

விருதுநகர், மே 27: விருதுநகர் மாவட்டத்தில் புதிய தொழில் தொடங்க, தொழிலை மேம்படுத்த, அதன் மூலமாக வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முத்ரா கடன் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறும் 11 வட்டாரங்களில் முகாம்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த நிதியாண்டில் மாவட்டத்தில் ரூ.400 கோடிக்கு கடன் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் வகையில் ரூ.50ஆயிரத்தில் இருந்து ரூ.10லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற முத்ரா லோன் மேளாவில் 26 வங்கிகளின் 272 கிளைகளும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் லோன் நேர்காணல் நடத்தி, தேவையான சான்றிதழ்களை பெற்றனர். 11 இடங்களில் நடைபெற்ற லோன் மேளாவில் 394 பயனாளிகளிடம் இருந்து ரூ.8.37 கோடி கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Mudra Loan Mela ,
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...