முதல்வருடன் சந்திப்பு மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையில் ‘நிருத்யாஞ்சலி’ கலெக்சன் அறிமுகம்

கோவை, மே.27: கோவை காந்திபுரத்தில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையில்  ‘நிருத்யாஞ்சலி’ கலெக்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கலெக்சனை  ராஜி மற்றும் பூவிழி ஆகியோர்  அறிமுகப்படுத்தினர். இது குறித்து மலபார் குழுமத்தின் தலைவர் அகமது கூறியதாவது: எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்வின் ஒவ்வொரு சிறப்பான தருணத்திலும் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதாக நம்புகிறோம். ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற தனித்துவமான கலெக்சன்கள் உயர்வான தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை அவர்களுக்கு வழங்குகிறோம்.

‘நிருத்யாஞ்சலி’ தொகுப்பின் மூலம், எங்கள் பிராண்டுடன் தொடர்புடைய பாரம்பரிய மற்றும் கலை மதிப்புகளை முன்னிலைப்படுத்தவும், இந்தியாவின் பாரம்பரிய நடனங்களுக்கு மரியாதை செலுத்தவும் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதில், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத்,  கிளை தலைவர் மனு,  மேலாண்மை பயிற்சி ராகுல், கோவை கிளை வர்த்தக மேலாளர் தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: