×

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ, விசிக ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர், மே 27: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் வெறுப்பு அரசியல் செய்யும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விசிக தெற்கு மாவட்ட செயலாளர் முரசுதமிழப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் மார்க்சிஸ்ட் முத்துக்குமார், இந்திய கம்யூ. ஆண்டி, விசிக சங்கத்தமிழன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் அர்ச்சுணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் மார்க்சிஸ்ட் ஆறுமுகம், ரவிச்சந்திரன், இந்திய கம்யூ. செல்வராஜ், விஜயகுமார், அம்பிகா, விசிக தமிழ்வாணன், வழக்கறிஞர் அரசூர் ராஜ்குமார், வடிவேல்முத்து, மகளிரணி மாவட்ட துணை செயலாளர்கள் டிலைட்டா,  ரதி அம்மாள், விடுதலைச்செழியன், தமிழ்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் கரும்பன், விசிக மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் மாநகர் செயலாளர்  ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா, ஓட்டப்பிடாரம்  ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், இந்திய கம்யூ. மாநகர் செயலாளர் தனலெட்சுமி,  ஒன்றிய செயலாளர் ஜெபக்கனி ஞானசேகர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர்  செல்வன், விசிக மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ கணேசன், மாவட்ட  பொருளாளர் ஆறுமுக நயினார், மாவட்ட அமைப்பாளர் சுலைமான் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். கோவில்பட்டி காளியம்மன் கோயில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை வகித்தனர். இந்திய கம்யூ. நகர செயலாளர் சரோஜா முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Marxist ,communist ,Vizika ,BJP government ,
× RELATED சிறப்பு குழு ஆளுநரை தேர்வு செய்யும்:...