×

நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி


செய்துங்கநல்லூர், மே 27: செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. சப்பர பவனி அன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை சாத்தான்குளம் மறைமாவட்டம் ரவிபாலன் நடத்தினார். தொடர்ந்து சப்பர பவனி நடந்தது. இதில் மிக்கெல் சம்மன்ஸ், பரமோலாக மாதா, சூசையப்பர் என 3 சப்பர பவனி வந்தது. இந்த சப்பரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் முன்பு நிறைவடைந்தது. ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கை சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.

Tags : Sappara Bhavani ,Nattarkulam ,St. Soosaiyappar Temple Festival ,
× RELATED பாளை சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது