×

21வது வார்டில் அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமையில் மேயர் சரவணன், துணைமேயர் கேஆர் ராஜூ ஆய்வு

பேட்டை, மே 27: நெல்லை மாநகராட்சி, நெல்லை மண்டலம், 21வது வார்டுக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமையில் மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ ஆய்வு செய்தனர்.
 இதையொட்டி வினைதீர்த்த விநாயகர் கோவில் தெருவில் உள்ள வாய்க்காலை ஆய்வுசெய்தபோது இதை பொதுப்பணித்துறையுடன் இணைந்து முறையாக தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இருவரும் அறிவுறுத்தினர்.
அப்போது அப்துல்வஹாப் எம்எல்ஏவிடம் கருங்காடு செல்லும் வழியில் மயானக்கரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ரோட்டை அகலப்படுத்தி தார்சாலை அமைக்க வேண்டும். சுமார் 100 பேர் அமரும் வகையில் ஓய்வறை அமைக்க வேண்டும். மயானக்கரை செல்லும் பாதையில் மின் விளக்கு அமைப்பதோடு சுற்றுப்பகுதி முழுவதும் முள்வேலி அமைத்து கதவு போட வேண்டும்.

மேலும் தகன மேடையின் உயரத்தை அதிகப்படுத்தவும், கூடுதலாக சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அப்துல்வஹாப் எம்.எல்.ஏ., மக்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயில் அருகே மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கேஆர் ராஜூ ஆகிய இருவரும் மரக்கன்றுகள் நட்டினர். ஆய்வின் போது செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் (பொ) பைஜூ, நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, மாரியப்பன், ஷேக் மன்சூர், சுப்பிரமணியன், அல்லாபிச்சை, இளநிலை பொறியாளர்கள் முருகன், ஐயப்பன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னதுரை, உறுப்பினர்கள் முருகன், ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : Mayor ,Saravanan ,Deputy Mayor ,KR Raju ,21st Ward ,Abdul Wahab ,MLA ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!