×

ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மே 27: திருவாரூரில் ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வினை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், எல்ஐசி பங்குகள் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வடிவழகன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜிவ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் ஒன்றிய செயலாளர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கேசவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜெயபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் (வடக்கு) செல்வம் ஆகியோர் தலைமையிலும், பேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும், குடவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னார்குடி: இதேபோல் சிபிஐ, சிபிஎம், விசிக சார்பில் கோட்டூர் கடைவீதியில் எம்எல்ஏ மாரிமுத்து தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய செயலா ளர்கள்  சிபிஐ செந்தில்நாதன், சிபிஎம் சண்முகவேல், கோவிந்தராஜ், விசிக கவாஸ்கர் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : Communists ,United States government ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள்...