×

விராலிமலை, திருமயம், கந்தர்வகோட்டையில் ஜமாபந்தி முகாம் துவக்கம்

விராலிமலை, மே 27: வருவாய்துறை சார்பில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதில் அந்தந்த வட்டத்திற்குட்பட்ட உள்வட்டத்தில் உள்ள கிராம கணக்குகள் ஜமாபந்தி அலுவலரால் சரிபார்க்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் 1431ம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் விராலிமலை,கொடும்பாளூர், நீர்பழனி ஆகிய 3 உள்வட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி நேற்றுமுன்தினம்(புதன்கிழமை) தொடங்கியது. குன்னத்தூர் கலால் மேற்பார்வை அலுவலர் திருஞானம்(தனி துணை ஆட்சியர்) தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு கான சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் முதல் நாளான புதன்கிழமை கொடும்பாளூர் சரகத்திற்குட்பட்ட ராஜாளிப்பட்டி, நம்பம்பட்டி, விராலூர், ராஜகிரி, கொடும்பாளூர், கசவனூர் உள்பட 13 வருவாய் கிராம கணக்குகளை புதுக்கோட்டை மாவட்ட பறக்கும்படை தனிவட்டாட்சியர் சோனைகருப்பையாவால் சரிபார்க்கப்பட்டது.

திருமயம்: திருமயம் தாலுகாவில் நடைபெற்ற ஐமாபந்தியில் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நிலவரி கணக்கு முடிக்கும் பணியை தொடங்கி வைத்தார். தாசில்தார் பிரவீனாமேரி வரவேற்றார். முதல் நாளான நேற்றுமுன்தினம் செங்கீரை பிர்க்கா கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. தணிக்கை தொடங்குவதற்கு முன் டிஆர்ஓ செல்வி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப்பெற்றார். துணை தாசில்தார் சாமிநாதன் நன்றி கூறினார். ஜமாபந்தி காண ஏற்பாடுகளை ஆர்ஐ முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர். கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் பசலி 1431 க்கான ஜமாபந்தி என்னும் வருவாய் தீர்வாயம் மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி -வைகை -குண்டாறு இணைப்பு திட்டம்) ரம்யா தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் ( பொ) தயாவதி கிறிஸ்டினா முன்னிலை வகித்தார். துவக்க நாளான புதன்கிழமை பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து 20க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கியுள்ளனர். மேலும் முகாமினை பயன்படுத்தி சரகத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என வட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Jamabandi Camp ,Viralimalai ,Thirumayam ,Kandarvakottai ,
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...