ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா

ஜெயங்கொண்டம், மே 27: ஜெயங்கொண்டம் மாடர்ன் கலைக்கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாடர்ன் கல்விக் குழும நிறுவன தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுரேஷ், செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 600 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், பெண் கல்வியை முன்னேற்றுவதற்காக பல்வேறு வகைகளில் தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். முன்னதாக கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் அருள் வரவேற்றார். நிகழ்ச்சியை பேராசிரியர் திருவள்ளுவன் தொகுத்து வழங்கினார். கல்வியியல் கல்லூரி முதல்வர் மரிய கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.

Related Stories: