கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான 2 நாள் புத்தாக்க பயிற்சி

அரியலூர், மே 27: அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி 25, 26 ஆகிய 2 நாட்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.

பயிற்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (ஓய்வு) சங்கரலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில் அரியலூர் சரக துணைப்பதிவாளர் அறப்பள்ளி, கூட்டுறவு சார்பதிவாளர், \”அ\” கண்காணிப்பாளர், \”ஆ\” கண்காணிப்பாளர், கள அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் புத்தாக்க பயிற்சியில் கலந்துகொண்டனர்.

Related Stories: