பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தக்கோரி அரசு அலுவலர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

கரூர், மே 27: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன், பொருளாளர் விக்னேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 2003 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ஒய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலை படியை உடனே அறிவிக்க வேண்டும். மேலும், நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு (பணப்பயன்) பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: