×

அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் உறுதி

காரைக்குடி, மே 26: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி கூட்டம் நடந்தது. செயல் அலுவலர் ரமேஷ்பாபு வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன் தலைமைவகித்தார். துணை தலைவர் சோலைராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் ஜெய்கணேஷ், கற்பகம், அன்புக்கரசி, கருப்பையா, வசந்தி, சுரேகா, பாண்டிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன் பேசுகையில், ‘வார்டு பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் அனைத்தும் முன்னுரிமை கொடுத்து பூர்த்தி செய்யப்படும். சுற்றுலா நகரான இப்பகுதியை தூய்மையாக பராமரிக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். நேமத்தான்பட்டியில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தில் பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் 8வது வார்டு பகுதியில் ரூ.15 லட்சத்தில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட உள்ளது. மன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்றார்.செயல் அலுவலர் ரமேஷ்பாபு: மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தவைகள் ஒன்றாக படிப்படியாக மேற்கொள்ளப்படும்’ என்றார்.


Tags : mayor ,Kanadukathan ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!