×

கட்டிட பணி பாதியிலேயே நிறுத்தம் இன்ஜினியரை கண்டித்து தர்ணா போராட்டம்

திண்டுக்கல், மே 26: திண்டுக்கல் லயன் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் சாலையோரம் தள்ளுவண்டியில் சிக்கன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். எரியோட்டில் உள்ள காமராஜர் நகரில்  தனக்கு சொந்தமான 900 சதுர அடி இடத்தில் வீடு கட்டி கொடுக்கும்படி பொறியாளர் ஒருவரை அணுகியுள்ளார். வீடு கட்ட ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் ஆகும் என பொறியாளர் கூறியதாக கூறப்படுகிறது. அதன்படி 27.10.2020ல் வீடு கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. முன்பணமாக தண்டபாணி  ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், அந்தப் பொறியாளர் தொடர்ந்து பணிகளை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து தண்டபாணி, பொறியாளரிடம் கேட்ட போது  தனக்கு கூடுதலாக பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து தண்டபாணி எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மனமுடைந்த தண்டபாணி நேற்று திண்டுக்கல் ஆர்.எம்.காலனி வண்டிப்பாதை பகுதியில் உள்ள பொறியாளர் வீட்டின் முன்பு தனது குடும்பத்துடன் சென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த வந்த திண்டுக்கல் மேற்கு போலீசார் தண்டபாணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பின்ேன, தண்டபாணி போராட்டத்தை கைவிட்டார்.

Tags : Dharna ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...